ஐரோப்பிய ஆதவாளரான உக்ரைனின் முன்னாள் சபாநாகர் சுட்டுக்கொலை!
உக்ரைனின் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பருபி லிவிவ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு உக்ரைனின் லிவிவ் மாகாணத்தின் பிராங்கிவ்ஸ்க் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை நண்பகல் வேளையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன.
கூரியர் உடையில் மின்-பைக்கில் வந்த ஒரு துப்பாக்கிதாரியால் பருபி பலமுறை சுடப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
54 வயதான பருபி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) நெருக்கமான உறவுகளை ஆதரித்தவர். 2014 இல் ரஷ்ய சார்பு முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை வீழ்த்திய உக்ரைனின் நடந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக முக்கிய நபராக இருந்தவர் என்பது நினைவூட்டத்தக்கது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இதை ஒரு கொடூரமான கொலை என்று விவரித்து தனது இரங்கலைத் தெரிவித்தார்.
உக்ரைனின் தேசிய காவல்துறை, லிவிவ் பிராந்திய காவல்துறை மற்றும் பாதுகாப்பு சேவை ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. தாக்குதலுக்குப் பின்னால் யார் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
Post a Comment